SBI வாடிக்கையாளர்களுக்கான புதிய சேவை – ஆன்லைன் மூலமாகவே KYC செயல்முறை!
SBI வங்கி வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலமாகவே எப்படி KYC செயல்முறையை முடிப்பது என்பது குறித்தான முழு விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
KYC செயல்முறை:
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வாடிக்கையாளர்களின் நிதி அமைப்பை பாதுகாக்கும் பொருட்டு கட்டாயமாக (KYC) விவரங்களை புதுப்பிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், வாடிக்கையாளர்களின் வேலையை எளிதாக்கும் வகையில் KYC தகவலை ஆன்லைன் வழியாகவே புதுப்பிக்கும் படியான சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது எப்படி KYC ஐ ஆன்லைன் மூலமாக புதுப்பிப்பது என்பதை காணலாம்.
தமிழகத்தில் சாதி வாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு – நீதிமன்றம் புதிய அறிவிப்பு!
முதலில், SBI வங்கியின் பேங்கிங் போர்ட்டலுக்கு சென்று ‘KYC’ என்கிற பகுதியை கிளிக் செய்யவும். இதன் பின்னர், உங்களது பெயர், முகவரி மற்றும் பிறந்த தேதி போன்ற விவரங்களை பதிவு செய்து பான், ஆதார் ஆவணங்களையும் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்யவும். அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றம் செய்த பின்னர் Submit கொடுக்கவும். இவ்வாறு, ஆன்லைன் மூலமாகவே KYC செயல்முறையை வாடிக்கையாளர்கள் முடித்து கொள்ளலாம்.