இடைக்கால போர் நிறுத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா.. மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் டிரம்ப் – புதின்..  

0
???????? ???? ??????????????? ????????? ????????? ?????.. ???????? ?????????????????? ???????? ??????? - ??????..  
இடைக்கால போர் நிறுத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா.. மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் டிரம்ப் - புதின்..  

இடைக்கால போர் நிறுத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா.. மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் டிரம்ப் – புதின்..  

ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கும் இடையே சுமார் 3 ஆண்டுகளுக்கு மேலாக போர் நடந்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முயன்று வருகிறார். மேலும், இந்த போர் தொடர்பாக ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளுடன் டிரம்ப் சவுதி அரேபியாவில் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் ரஷ்யாவிற்கும், உக்ரைனுக்கும் இடையே 30 நாட்கள் இடைக்கால போர் நிறுத்தம் செய்வது என முடிவெடுக்கப்பட்டது. இந்நிலையில் இந்த போர் நிறுத்தம் குறித்து புதிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

 மக்களே.., இனி மின்கட்டணம் செலுத்த தேவையில்லை…!! மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் தகவல்..!!

அதாவது, 30 நாட்கள் இடைக்கால போர் நிறுத்தம் குறித்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஒப்புதல் தெரிவித்துள்ளார். ஆனால் இதனை ஏற்க மறுக்கும் ரஷ்ய அதிபர் புதின், இடைக்கால போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை குறித்து அமெரிக்கா விளக்கம் அளிக்க வேண்டும் என  கூறியுள்ளார். இதனால் கோபம் அடைந்த டிரம்ப், ”போர் நிறுத்தத்தை ஏற்க மறுப்பது பேரழிவை ஏற்படுத்தும்” என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், உக்ரைன் உடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முதற்கட்டமாக அமையும் இந்த இடைக்கால போர் நிறுத்தம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் – ரஷ்ய அதிபர் புதின் இருவரும் மீண்டும்  தொலைபேசியில் இன்று (18-03-2025) பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!