NIELIT துறையில் ரூ. 1,12,400 மாத ஊதியத்தில் வேலை… விண்ணப்பிக்க இன்றே இறுதி நாள்…முழு விவரம் இதோ

0
NIELIT ???????? ??. 1,12,400 ??? ?????????? ????... ???????????? ????? ????? ????...???? ?????? ???
NIELIT துறையில் ரூ. 1,12,400 மாத ஊதியத்தில் வேலை... விண்ணப்பிக்க இன்றே இறுதி நாள்...முழு விவரம் இதோ

NIELIT துறையில் ரூ. 1,12,400 மாத ஊதியத்தில் வேலை… விண்ணப்பிக்க இன்றே இறுதி நாள்…முழு விவரம் இதோ

தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் (NIELIT) காலியாக உள்ள அறிவியல் உதவியாளர்  பணியிடங்களை நிரப்ப உள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. இதற்கு, தகுதியான விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும், இதற்கான முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். எனவே, இதை முழுமையாக படித்து தெரிந்து கொண்டு விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

NIELIT காலிப்பணியிடங்கள்:

NIELIT வெளியிட்ட அறிவிப்பில் 78 அறிவியல் உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

NIELIT கல்வித்தகுதி:

தகுதியான  விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் Electronics / Electronics and Communication / Electronics and Telecommunication / Computer Science / Computer and Networking Security / Software System / Information Technology / Electrical / Informatics ஆகிய துறைகளில் ஏதேனும் ஒன்றில் பி.இ / பி. டெக் / எம்.எஸ்.சி பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

NIELIT வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசில் 10 வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ. 81,100 சம்பளத்தில் ஒரு புதிய வேலைவாய்ப்பு…விண்ணப்பிக்கும் வழிமுறைகள் இதோ

NIELIT ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 35,400 முதல் ரூ. 1,12,400 வரை மாத ஊதியம் வழங்கப்படுகிறது.

NIELIT தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு (குறிக்கோள் வகை) மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

NIELIT விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் https://recruit-delhi.nielit.gov.in/frmHome.aspx என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் இன்று (18.03.2025) மாலை 05.30 மணியுடன் முடிவடைவதால், தகுதியான விண்ணப்பத்தாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!