குடும்ப தலைவிகளுக்கான ரூ.2000 உதவித்தொகை – யார் யாருக்கு வழங்கப்படும்?

0
குடும்ப தலைவிகளுக்கான ரூ.2000 உதவித்தொகை - யார் யாருக்கு வழங்கப்படும்?
குடும்ப தலைவிகளுக்கான ரூ.2000 உதவித்தொகை - யார் யாருக்கு வழங்கப்படும்?
குடும்ப தலைவிகளுக்கான ரூ.2000 உதவித்தொகை – யார் யாருக்கு வழங்கப்படும்?

குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2000 வழங்கும் திட்டம் வரும் ஆகஸ்ட் 15 முதல் அமலுக்கு வர இருக்கும் நிலையில், இந்த உதவித்தொகை யார் யாருக்கு வழங்கப்படும் என்பதற்கான அறிவிப்பும் தற்போது வெளியாகியுள்ளது.

உதவித்தொகை:

கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் அரசு இலவச மின்சாரம், பெண்களுக்கான இலவச பேருந்து திட்டம், குடும்ப தலைவிகளுக்கு ரூ.2000 உதவித்தொகை, வேலையில்லா பட்டதாரிகளுக்கு உதவித்தொகை மற்றும் அன்ன பாக்கிய திட்டத்தின் மூலமாக குடும்பத்திற்கு 10 கிலோ வரை அரசு வழங்கும் திட்டத்தை அமல்படுத்த இருப்பதாக உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில், குடும்பத் தலைவிகளுக்கான மாதந்தோறும் ரூபாய் 2000 உதவித்தொகை திட்டம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் தொடங்க இருக்கும் நிலையில் தகுதியுள்ள குடும்ப தலைவிகளுக்கு மட்டுமே இந்த உதவி தொகை வழங்க இருப்பதாக முதல்வர் சித்தராமையா அறிவித்திருக்கிறார்.

அரசு ஊழியர்கள் ஊதியத்தில் 50% ஓய்வூதியமாக வழங்கும் திட்டம் – அமைச்சரவை ஒப்புதல்!

அதாவது, ஒரு குடும்பத்தில் ஒரு பெண் மட்டுமே இந்த திட்டத்தின் மூலமாக பயன்பெற முடியும் எனவும், இந்த உதவித்தொகை பெறுவதற்கு குடும்பத் தலைவிகள் வரும் ஜூன் 15 முதல் ஜூலை 15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், குடும்பத்தலைவிகள் தவறான தகவலை கொடுத்து இதன் மூலமாக ரூபாய் 2000 உதவித்தொகை பெற்றால் அவர்களுக்கான உதவித்தொகை முழுவதும் திரும்ப பெறப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த உதவி தொகை பெறுவதற்கு பயனாளர்களின் வங்கிக் கணக்குடன் கட்டாயமாக ஆதார் எண்ணை இணைத்திருக்க வேண்டும் எனவும், குடும்பத்தில் யாரேனும் ஒருவர் வருமான வரி செலுத்தி வந்தாலும் அவர்களுக்கு இந்த ரூபாய் 2000 உதவித்தொகை வழங்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!