ஆசிரியருக்கு ரூ.1.42 லட்சம் இழப்பீடு – மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் புதிய தீர்ப்பு!!

0
ஆசிரியருக்கு ரூ.1.42 லட்சம் இழப்பீடு - மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் புதிய தீர்ப்பு!!
ஆசிரியருக்கு ரூ.1.42 லட்சம் இழப்பீடு - மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் புதிய தீர்ப்பு!!
ஆசிரியருக்கு ரூ.1.42 லட்சம் இழப்பீடு – மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் புதிய தீர்ப்பு!!

போலியான ATM மூலமாக பணம் திருடப்பட்ட நிலையில் ரூ.1.42 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இழப்பீடு:

தூத்துக்குடி மாவட்டம் தென்காசியை சேர்ந்த ஆசிரியரின் வங்கிக் கணக்கில் இருந்து போலியான ஏடிஎம் கார்டை பயன்படுத்தி ஏழு முறை பணம் எடுத்ததற்காக தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் இழப்பீடு வழங்க வேண்டும் என வங்கிக்கு உத்தரவிட்டுள்ளது. அதாவது, தென்காசியை சேர்ந்த ஆசிரியரின் வங்கிக் கணக்கில் இருந்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கிட்டத்தட்ட நான்கு முறை பணம் எடுத்ததாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இது குறித்து வங்கி மேலாளரிடம் புகார் அளித்தபோது வங்கியின் சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதன் பின்னர் மீண்டும் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுத்ததாக குறுஞ்செய்தி வந்ததையடுத்து உடனடியாக ஏடிஎம் கார்டை செயலிழக்க செய்துவிட்டு தென்காசி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக, விசாரித்த போது, போலி ஏடிஎம் கார்டு மூலமாக பணம் திருடப்பட்டது உறுதியாகியுள்ளதால் இந்த ஆசிரியர் திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், ஆசிரியர் இழந்த தொகை மற்றும் மன உளைச்சலுக்கான இழப்பீடு ரூ.25,000, வழக்கு செலவு தொகை ரூ. 10,000 என மொத்தமாக ரூ. 1,42,131 ஒரு மாதத்திற்குள் ஆறு சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என வங்கிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!