தமிழகத்தில் முட்டை விலை திடீர் உயர்வு – பொதுமக்களுக்கு அதிர்ச்சி தகவல்!

0
தமிழகத்தில் முட்டை விலை திடீர் உயர்வு - பொதுமக்களுக்கு அதிர்ச்சி தகவல்!
தமிழகத்தில் முட்டை விலை திடீர் உயர்வு - பொதுமக்களுக்கு அதிர்ச்சி தகவல்!
தமிழகத்தில் முட்டை விலை திடீர் உயர்வு – பொதுமக்களுக்கு அதிர்ச்சி தகவல்!

தமிழகத்தில் நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.4.80க்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

முட்டை விலை

தமிழக மக்கள் மத்தியில் விருப்பமான உணவுகளில் ஒன்றாக முட்டை இருக்கிறது. இந்நிலையில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முட்டை விலை குறித்து பண்ணையாளர்களிடம் கருத்து கேட்பு நடத்தப்பட்டது. அதில் மற்ற மண்டலங்களில் விலை சற்று உயர்ந்து இருப்பதால், இங்கும் விலையில் மாற்றம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது.

2024: பொங்கல் பரிசுத்தொகுப்பு – அரசுக்கு வந்துள்ள முக்கிய கோரிக்கை!

அதனை தொடர்ந்து முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்வுடன் ரூ. 4.80 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. மேலும் பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ.77 க்கும், முட்டை கோழி விலை கிலோ ரூ.83க்கும் விற்க நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து முட்டை விலை உயர்வால் பொதுமக்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!