21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மது விற்க தடை – மாநில அரசு அதிரடி!

0
21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மது விற்க தடை - மாநில அரசு அதிரடி!
21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மது விற்க தடை - மாநில அரசு அதிரடி!
21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மது விற்க தடை – மாநில அரசு அதிரடி!

உத்திரபிரதேசம் மாநிலத்தில் மதுபானம் வாங்க வயது வரம்பை அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மது கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மது விற்பனை

உத்தரபிரதேசம் மாநிலத்தில் 2023-24 நிதியாண்டில் மத்திய கலால் துறையில் ரூ. 50 ஆயிரம் கோடி வருவாயை உயர்த்த அமைச்சர் நிதின் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து நேற்று கலால் துறை முதன்மை செயலாளர், கலால் ஆணையர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். அதில் நவம்பர் மாதம் வரை ரூ.27,340.97 கோடி வருவாய் கிடைத்துள்ளதாகவும், இது கடந்த ஆண்டு பெற்ற வருவாயை விட சுமார் 10 சதவீதம் அதிகமாகும் என தெரிவித்தார்.

தமிழகத்தில் முட்டை விலை திடீர் உயர்வு – பொதுமக்களுக்கு அதிர்ச்சி தகவல்!

மேலும் பேசிய அவர் மாநிலத்தில் 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு எந்த காரணத்தை கொண்டும் மது விற்பனை செய்யக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார். கலால் துறையில் வருவாய் இலக்கு குறைவாக இருந்தால் 15 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கான்பூரின் துணை கலால் ஆணையரிடம் அவர் கேட்டு கொண்டுள்ளார். மேலும் ஆக்ரா, மதுரா, லக்னோ நெடுஞ்சாலை வழியாக சோன்பத்ரா வழியாக மிர்சாபூர் வழியாக பந்தல்கண்ட் நெடுஞ்சாலை வழியாக மதுபானம் கடத்தப்படுவதை கண்காணிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!