
தமிழகத்தில் மீண்டும் கொரோனா தொற்று.. சென்னையில் 3 பேர் பாதிப்பு.. சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய தகவல்..!!
2020 ஆம் ஆண்டு சீனாவின் வூஹான் மாநிலத்தில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக அளவில் பொருளாதார ரீதியாகவும், சுகாதார ரீதியாகவும் மக்களின் வாழ்வாதாரத்தில் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த கொரோனா பெரும் தொற்றை நவீன மருத்துவ கட்டமைப்புகள் மூலம் மத்திய, மாநில அரசுகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. மேலும், தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக தொற்று பாதிப்பு யாருக்கும் கண்டறியப்படவில்லை என்றாலும், கொரோனா வைரஸ் தீவிரத்தை, பொது சுகாதாரத்துறை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
பொதுமக்கள் கவனத்திற்கு.. ரேஷன் பொருட்கள் முடங்கும் அபாயம்.. அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை..!!
அதன்படி, “காய்ச்சல், சளி போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் 32 பேருக்கு நேற்று (21-04-2025) கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், சென்னையைச் சேர்ந்த, இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண் என, மூவருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், தொற்று பரவும் வகையிலான பாதிப்பு எதுவும் இல்லை என பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது”.























