UPSC இறுதி தேர்வு முடிவுகள் வெளியீடு – இங்கே டவுன்லோட் செய்யவும்!
UPSC ஆணையம் ஆனது Civil Services Examination, 2024 க்கான முடிவுகளை அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகள்:
UPSC ஆணையம் ஆனது அவ்வப்போது தகுதியானவர்களை தேர்வு செய்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்பி வருகிறது. கடந்த 2024ம் ஆண்டில் IAS, IPS மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
B.E./B. Tech தேர்ச்சி பெற்றவரா? ரூ.2,00,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு || மிஸ் பண்ணிடாதீங்க!
ஏராளமானோர் விண்ணப்பித்திருந்த நிலையில் இதற்கான Prelims, Mains மற்றும் நேர்காணலானது சமீபத்தில் நடத்தப்பட்டது. கடந்த ஜனவரி 7 முதல் ஏப்ரல் 17ம் தேதி வரை நேர்காணல் நடத்தி முடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதில் 1,129 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தற்போது UPSC தேர்வுக்கான முடிவுகள் UPSC -ன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியாகியுள்ளது. தேர்வர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பயன்படுத்தி தேர்வு முடிவுகளை பெற்றுக்கொள்ளலாம்.
























