மத்திய அரசின் சோலார் மின் உற்பத்தி திட்டம்.. கூடுதலாக வசூலிக்கப்படும் நெட்வொர்க் கட்டணம்..!!
பொதுமக்கள் பயனுறும் வகையில் மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பிரதமரின் சூர்யோதயா யோஜனா திட்டத்தின் கீழ், வீடுகளில் மேற்கூரை மின்சக்தி உற்பத்தி திட்டத்திற்கான கட்டமைப்பை ஏற்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, வீட்டு கூரைகளில் சூரிய தகடுகள் (Solar panel) அமைத்து மின் உற்பத்தி செய்பவர்களுக்கு, மத்திய-மாநில அரசுகள் மானியம் வழங்கி வருகின்றன. இந்த செயல்முறைக்கு மின்துறை சார்பில் நெட்வொர்க் கட்டணம் விதிக்கப்படுவதால் உரிமையாளர்கள் பாதிக்கப்படுகின்றனர் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
AIIMS-ல் ரூ.55,000/- ஊதியத்தில் வேலை – முழு விவரங்களுடன் || உடனே விண்ணப்பியுங்கள்!
இது குறித்து எம்பவர் இந்தியா நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் கல்வி ஆராய்ச்சி நடுவத்தின் கவுரவ செயலர் சங்கர் கூறியதாவது, “சூரிய சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்து, மின் வாரியத்திற்கு கிரிட் வாயிலாக அனுப்பும் போது, அந்த மின்சாரத்தை எடுப்பதற்கான கட்டணமே நெட்வொர்க் கட்டணம் ஆகும். இது தொடர்பாக, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, நெட்வொர்க் கட்டணத்தை ரத்து செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் இந்த கட்டண வசூலிப்பு நிறுத்தப்படவில்லை. மேலும், வீட்டிற்கு போக, மீதமுள்ள மின்சாரத்தை மின் வாரியத்திற்கு அனுப்பும் போது அதற்கான கட்டணத்தையும் தருவதில்லை என்றும், இதனால் மின் நுகர்வோர் தங்கள் கட்டமைப்பை கருவிகளை திரும்ப ஒப்படைத்து வருகின்றனர் என கூறினார். இதற்கு தீர்வு காண முதலமைச்சர் உரிய ஆணை பிறப்பிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்”.


























