தமிழக மின்துறையில் ஏற்படவுள்ள புதிய மாற்றம்.. இனி மாதம்தோறும் மின் கட்டணம் வசூலிக்கப்படும்.. வெளியான முக்கிய தகவல்..!!

0
????? ???????????? ?????????? ????? ???????.. ??? ??????????? ???? ??????? ???????????????.. ??????? ??????? ?????..!!
தமிழக மின்துறையில் ஏற்படவுள்ள புதிய மாற்றம்.. இனி மாதம்தோறும் மின் கட்டணம் வசூலிக்கப்படும்.. வெளியான முக்கிய தகவல்..!!

தமிழக மின்துறையில் ஏற்படவுள்ள புதிய மாற்றம்.. இனி மாதம்தோறும் மின் கட்டணம் வசூலிக்கப்படும்.. வெளியான முக்கிய தகவல்..!!

இன்றைய தேதிக்கு தமிழகத்தில் வீடுகள், கடைகள், தொழிற்சாலைகள் உட்பட மொத்தம் 3.04 கோடிக்கு மேலான மின் இணைப்புகள் உள்ளன. இந்த இணைப்புகளுக்கான கட்டணங்களை மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையம் நிர்வகிக்கிறது. அந்த வகையில் வீடுகளுக்கு விநியோகிக்கப்படும் முதல் 100 யூனிட்கள் இலவசமாக வழங்கப்படுகிறது, மேலும் 101 யூனிட் முதல் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு யூனிட்டிற்கும் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கட்டணம் வசூலிக்கப்பட்டுகிறது. இந்த கட்டணத்தை செலுத்த தவறினால் மின் வாரியத்தால் மின் விநியோகமானது துண்டிக்கப்படும்.

மத்திய அரசின் சோலார் மின் உற்பத்தி திட்டம்.. கூடுதலாக வசூலிக்கப்படும் நெட்வொர்க் கட்டணம்..!!

இந்நிலையில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கணக்கிடும் முறையால் மக்கள் பெரும் தொகை செலுத்த வேண்டியுள்ளது என கருதி இதனை மாற்றி மாதந்தோறும் மின் கட்டண கணக்கீட்டு முறையை அமல்படுத்த மின்வாரியம் திட்டமிட்டுள்ளது. இதற்காக மின்வாரியம் தற்போது ஸ்மார்ட் மீட்டர் பெட்டி உற்பத்தி செய்ய  டெண்டர் கோரியுள்ளது என்றும், இன்னும் 3-4 மாதங்களில் தகுதியான நிறுவனங்களுக்குப் பணி ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் மீட்டர் மூலம் மின் பயன்பாடு துல்லியமாகக் கணக்கிடப்படும் என்பதால், மக்கள் அதிக பணச் சேமிப்பு செய்யும் வாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது.

 Join the ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!