Post Office PPF சேமிப்பு திட்டம் – நாமினி அப்டேட் செய்ய புதிய விதிமுறை!

0

Post Office PPF சேமிப்பு திட்டம் – நாமினி அப்டேட் செய்ய புதிய விதிமுறை!

சேமிப்பு என்பது இன்றைய காலகட்டத்தில் இன்றியமையாத ஒன்றாக இருந்து வருகிறது. ஆனால் தொடர்ந்து அதிகரித்து வரும் விலையேற்றத்தின் காரணமாக சேமிப்பு என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இருப்பினும் மக்களின் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க பல்வேறு சேமிப்பு திட்டங்கள் அமலில் உள்ளன. போஸ்ட் ஆபீஸ், வங்கிகள் மற்றும் பல நிறுவனங்கள் சேமிப்பு திட்டத்தை வழங்கிவருகிறது. போஸ்ட் ஆபீஸில் அமலில் உள்ள இந்த பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தை வழங்கி வருகிறது.

வெளிநாட்டில் இருந்து எவ்வளவு தங்கம் கொண்டு வர முடியும் தெரியுமா? முழு விவரங்களுடன்!

இந்தத் திட்டத்தில் தற்போது 15 ஆண்டுகள் லாக்-இன் காலம் உள்ளது. இதில் ஓர் ஆண்டுக்கு 7.1% வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. “அரசு சேமிப்பு ஊக்குவிப்பு பொது விதிகள், 2018 இல், அட்டவணை II இல், ‘சேவைகளுக்கு வசூலிக்கப்படும் கட்டணம்’ என்பதன் கீழ், ‘(b) நாமினி நியமனத்தை ரத்து செய்தல் அல்லது மாற்றுதல் – ₹ 50’ என்பது நீக்கப்படும்,” என்று நிதி அமைச்சக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. PPF கணக்கு வைத்திருப்பவர் மறைந்துவிட்டால், கணக்கில் உள்ள நிதி நியமிக்கப்பட்ட நாமினிகளுக்கு மாற்றப்படும். இதனால், பிபிஎஃப் கணக்குகளில் உள்ள வாரிசுதாரர் விவரங்கள் சமீபத்தியதாக இருப்பது முக்கியம் ஆகும்.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!