தமிழ்நாடு பொருளாதாரம் 9.69% வளர்ச்சியுடன் புதிய உச்சம் – முதல்வர் பெருமிதம்!
கடந்த 2023-24 நிதியாண்டில் தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 15 லட்சத்து 71 ஆயிரத்து 368 கோடியாக இருந்த நிலையில், இப்போது இது 9.69% அதிகரித்து பெரும் உச்சத்தை கண்டுள்ளது. இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘எக்ஸ்’ தளத்தில் ”9.69% வளர்ச்சியுடன் தமிழ்நாடு இந்தியாவிலேயே மிக அதிக விகித வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது! அதுவும் பாலின சமத்துவம், அனைத்துப் பகுதிகளுக்கும் சமமான வளர்ச்சி என அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் தொடர்ந்து கவனம் செலுத்தி இந்தச் சாதனையை நாம் எட்டியுள்ளோம் என்பதுதான் மிகவும் பாராட்டுக்குரியது.
Post Office PPF சேமிப்பு திட்டம் – நாமினி அப்டேட் செய்ய புதிய விதிமுறை!
அடிப்படைகளில் உறுதி, நிலையான நிர்வாகம், தெளிவான தொலைநோக்கு ஆகியவற்றைக் கொண்டு நம் மாநிலம் மற்றும் மக்களின் எதிர்காலத்தை திராவிட மாடல் வடிவமைத்து வருகிறது. ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம் எனும் நம் பேரிலக்கை நோக்கி வலிமையோடும் உறுதியோடும் விரைந்து கொண்டிருக்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.


























