சென்னையில் நாளை மின்தடை ஏற்படவுள்ள பகுதி – மின்வாரியம் அறிவிப்பு!
நாளை ஆவடி மற்றும் கே.கே. நகர் பகுதிகளில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை:
தமிழகம் முழுவதும் துணை மின் நிலையம் மூலம் 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இவற்றில் பழுது ஏற்படாமல் இருக்க சம கால இடைவெளியில் அவ்வப்போது பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து மின்தடைக்கு முன்பாக எச்சரிக்கை அறிவிப்புகள் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் வாயிலாக வெளியிடப்பட்டு வருகிறது. தற்போது தற்காலிக மின் தடை செய்வதை தவிர்க்க, துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிக்கு, மின் வாரியம் தடை விதித்து உள்ளது.
வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான பதிவு தான் இது!
இந்நிலையில் சென்னையில் நாளை (ஆக. 01) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக ஆவடி மற்றும் கே.கே. நகர் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின் மதியம் 2 மணிக்கு பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் வழங்கப்படும் என்றும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆவடி மற்றும் கே.கே. நகர் பகுதியில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.























