நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு – மாவட்ட ஆட்சியர்!

0

நீலகிரி மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு – மாவட்ட ஆட்சியர்!

நீலகிரி மாவட்டத்தில் இன்று முதல் ஆக. 2ம் தேதி வரை மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எச்சரிக்கை:

தமிழகத்தில் ஆங்காங்கே பரவலாக பருவமழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், நீலகிரி மாவட்டத்தில் இன்று முதல் ஆக. 2ம் தேதி வரை மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மாவட்டத்தில் சில இடங்களில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது. எனவே நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா முக்கிய அறிவுரைகளை வழங்கி உள்ளார்.

சென்னையில் நாளை மின்தடை ஏற்படவுள்ள பகுதி – மின்வாரியம் அறிவிப்பு!

நிலச்சரிவு அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளதால் நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக வர வேண்டும் என்றும் மேட்டுப்பாளையம் – உதகை மற்றும் கூடலூர் வரும் கனரக சரக்கு வாகனங்கள் இன்று முதல் ஒரு வாரத்திற்கு போக்குவரத்தை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!