வேலை தேடுபவரா நீங்கள்? உங்களுக்கான பதிவு தான் இது!
தமிழ்நாடு அரசின் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் கீழ் வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இது குறித்த முழு விவரங்களும் கீழ் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு:
தமிழ்நாடு அரசின் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. திறன்மிகு இளைஞர்களின் திறமைகளை பயன்படுத்தி நிர்வாகச் செயல்முறைகள் மற்றும் சேவை வழங்கலின் செயல்திறனை மேம்படுத்த, முக்கியத்துவம் வாய்ந்த “தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டம் -2024-26” என்ற திட்டத்தின் தகுதியானவர்கள் செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் இறுதி சுற்றுக்கு முன்னேறிய இந்தியர் – பதக்கம் கிடைக்குமா?
இதில் காலியாக உள்ள 25 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 22 வயது பூர்த்தியான 30 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.65,000/- ஊதியத்துடன் ரூ.10,000/- படி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிற்கல்வி படிப்புகளில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பமுள்ளவர்கள் 26.08.2024ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுத்திகிறார்கள்.
























