தபால் நிலையத்தின் எந்த திட்டத்தின் மூலம் எவ்வளவு லாபம் கிடைக்கும்? – முழு விவரங்கள் இதோ!
நாடு முழுவதும் உள்ள பொதுமக்கள் அனைவரும் சேமிப்பு திட்டங்களில் சேர்ந்து பயன்களை அடைந்து கொள்ளும் வகையில், மிகவும் சிறப்பான பலன்கள் அளிக்கப்படுகிறது.
சேமிப்பு திட்டங்கள்:
சேமிப்பின் அவசியத்தை மக்களுக்கு உணர்த்துவதற்காக அரசு பல்வேறு விழிப்புணர்வு விளம்பரங்கள், நிகழ்ச்சிகள் ஆகியவற்றை ஏற்பாடு செய்து வருகிறது. மேலும், அனைத்து வகையான பயனர்களுக்கும் தனித்தனியாக சிறப்பு வட்டி விகிதங்கள் நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. தனிநபர் சேமிப்பு, பெண் குழந்தைகளுக்கான திட்டம், ஆண் குழந்தைகளுக்கான திட்டம், வயது முதிர்ந்தவர்கள் திட்டம் என்று பல வகையான திட்டங்கள் உள்ளது.
ஜூன் 29 பொது விடுமுறை அறிவிப்பு – மாநில அரசின் அதிரடி!
அது போன்ற திட்டங்களையும், அரசு அதற்கு அளித்து வரும் வட்டி விகிதத்தையும் பற்றி முழுமையாக இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தபால் அலுவலக சேமிப்பு கணக்கு திட்டம் மூலம் மிகவும் குறைந்த அளவான ரூ.20 ஐ குறைந்தபட்ச கட்டணமாக நிர்ணயித்துள்ள திட்டம் ஆகும். இதற்கு ஆண்டுக்கு 4% வட்டியானது அளிக்கப்படும். தபால் அலுவலகம் தொடர் வைப்பு கணக்கு (RD) திட்டம் மூலம் மாதம் தோறும் நாம் விருப்பும் ஒரு குறிப்பிட்ட தொகையை சேமிப்பாக செலுத்த வேண்டும். ஆண்டுக்கு 6.20% வட்டி அளிக்கப்படும். தபால் அலுவலக நேர வைப்பு கணக்கு (TD) திட்டம் மூலம் குறைந்தபட்சம் ரூ.1,000 முதலீடு முதல் ரூ.1.5லட்சம் வரை முதலீடு செய்யலாம். இதன் மூலமும் 6.20% வட்டி அளிக்கப்படும். மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் (SCSS) குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை INR 1,000 மற்றும் அதிகபட்சம் INR 15,00,000ஆகும். மேலும்.8.20% வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது. இது போன்று இன்னும் பல திட்டங்களும் உள்ளது.