
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி.. முப்படைகளுக்கு முழு சுதந்திரம் கொடுத்த பிரதமர்.. வெளியான முக்கிய தகவல்..!!
ஜம்மு-காஷ்மீரில் உள்ள சுற்றுலா தலமான பஹல்காம் பகுதி பைசரனில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த பயங்கரவாத தாக்குதலில் சிக்கி 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் நடைபெற்ற போது, சவுதி அரேபியாவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் இச்செய்தி பற்றி அறிந்ததும் ஏப்ரல் 23 ஆம் தேதி காலை டெல்லி வந்தடைந்தார். பின்னர் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலிடம் விவரங்களை கேட்டறிந்த மோடி அன்று மாலையே பிரதமர் இல்லத்தில் பாதுகாப்பு துறைக்கான மத்திய அமைச்சரவையின் கூட்டம் நடத்தப்பட்டு பாகிஸ்தான் அரசுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை வெளியிடப்பட்டது.
அரசு மருத்துவக்கல்லூரியில் Echo Technician வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!
இதை தொடர்ந்து, “காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக பிரதமர் மோடியின் இல்லத்தில் நேற்று (29-04-2025) மாலை மீண்டும் பாதுகாப்பு தொடர்பான உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பஹல்கம் பயங்கரவாத தாக்குதலுக்கு கடுமையான பதிலடி கொடுப்பது நமது தேசிய உறுதிப்பாடு என்றும், எந்த இடத்திலிருந்து எந்த இலக்கை தாக்கி பதிலடி தர முழு சுதந்திரம் முப்படைகளுக்கு அளிக்கப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்”.

























