
இனி ATM களில் ரூ.100, 200 நோட்டுகள் மட்டுமே விநியோகிக்கப்பட வேண்டும்.. ரிசர்வ் வங்கி விதித்த அதிரடி உத்தரவு..!!
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக டிஜிட்டல் பரிமாற்றத்தின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. மேலும், இளம் வயதினர் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் பயன்படுத்துவதற்கு எளிதாக உள்ளதால் அனைத்து பரிமாற்றத்திற்கும் UPI மூலமே பணம் செலுத்துகின்றனர். இருப்பினும் சில சமயங்களில் தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக பணம் செலுத்துவதில் சிரமம் ஏற்படுகிறது. இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் சிலர் ATM சேவையை நாடுகின்றனர்.
எனவே “சாமானிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் ரூ.100 மற்றும் ரூ.200 நோட்டுகள் ATM இயந்திரங்களில் போதுமான அளவு விநியோகிக்கப்படுவதை உறுதி செய்திட வேண்டும்” என அனைத்து வங்கிகளுக்கும் இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி அனுப்பிய சுற்றறிக்கையில், “செப்டம்பர் 30-க்குள் அனைத்து வங்கி ATM இயந்திரங்களிலும் 75 சதவிகிதம் ரூ.100 மற்றும் ரூ.200 நோட்டுகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், 2026 மார்ச் மாதத்திற்குள் அனைத்து வங்கிகளும் இதை 90 சதவீதமாக உயர்த்த வேண்டும்” என அறிவித்துள்ளது.

























