அரசு மருத்துவக்கல்லூரியில் Echo Technician வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!

0

அரசு மருத்துவக்கல்லூரியில் Echo Technician வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!

நீலகிரி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் DEO, Echo Technician, IT Coordinator பணிக்கென காலியாக உள்ள 6 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும். இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

GMCH காலிப்பணியிடங்கள்:

DEO, Echo Technician, IT Coordinator பணிக்கென காலியாக உள்ள 6 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

IT Coordinator – 1 பணியிடம்

Echo Technician – 1 பணியிடம்

Data Entry Operator – 4 பணியிடங்கள்

கல்வி தகுதி:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் கல்வி தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

IT Coordinator – விண்ணப்பதாரர்கள் MCA / BCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Echo Technician – விண்ணப்பதாரர்கள் B.Sc / Diploma in Cardiac Technology / Medical Imaging Technology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Data Entry Operator – விண்ணப்பதாரர்கள் Any Degree / Diploma in Computer Application தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

GMCH வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 21 என்றும் அதிகபட்ச வயதானது 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆவின் நிறுவனத்தில் Sales Secretary வேலை – விண்ணப்பிக்க தவறாதீர்கள் || முழு விவரங்களுடன்!

ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.15,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

GMCH தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 05.05.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!