அரசின் ‘இந்த’ திட்டத்தில் ஊக்கத்தொகை ரூ.12,000 ஆக உயர்வு – பிரதமர் அறிவிப்பு!
ராஜஸ்தானில் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் ஊக்கத்தொகை ரூ. 12,000 ஆக உயர்த்தப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் நடப்பு ஆண்டு மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில் முதல் கட்டமாக மத்திய பிரதேசத்தில் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 200 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் நவம்பர் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் கட்சியினர் பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகின்றனர். அந்த வகையில் பாஜக அரசு விவசாயிகளுக்கான புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் நவ. 25 முதல் ஆவின் பால் விற்பனை நிறுத்தம் – நிர்வாகம் விளக்கம்!
அதாவது தற்போது விவசாயிகளுக்கு மத்திய அரசின் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 6000 ரூபாய் ஊக்கத்தொகையுடன் மாநில அரசு பங்களிப்புடன் ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் பீகானில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அத்துடன் பாஜக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும் என்றும் உறுதி அளித்தார்.