தமிழக தொடக்க கல்வி மாணவர்களுக்கு வகுப்புகள் – பெற்றோர்கள் கோரிக்கை!!

0
தமிழக தொடக்க கல்வி மாணவர்களுக்கு வகுப்புகள் - பெற்றோர்கள் கோரிக்கை!!
தமிழக தொடக்க கல்வி மாணவர்களுக்கு வகுப்புகள் - பெற்றோர்கள் கோரிக்கை!!
தமிழக தொடக்க கல்வி மாணவர்களுக்கு வகுப்புகள் – பெற்றோர்கள் கோரிக்கை!!

தொடக்கப்பள்ளி வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டில் ஒரு நாள் கூட வகுப்புகள் நடத்தப்படாத நிலையில், மாணவர்களுக்கு பாடங்கள் எடுப்பதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் தொடக்க கல்வித்துறைக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

பள்ளிகள் திறப்பு:

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், 2021 ஜனவரி மாதத்தில் இருந்து பள்ளிகள் திறப்பதற்கு அரசு அனுமதியளித்தது. இதனால் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி மாதத்தில் இருந்து பள்ளிகள் திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி மாதத்தில் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டது.

B.Arch. படிப்புகளுக்கான நாட்டா தேர்வு முடிவுகள் – இணையதளத்தில் வெளியீடு!!

தொடக்கப்பள்ளி வகுப்புகள்:

1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டில் ஒரு நாள் கூட பள்ளிகள் செயல்படவில்லை. இதனால் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு அரசு முறைப்படுத்திய வழிமுறைப்படி வருகை தரவில்லை. அரசு வாரத்தில் இரண்டு நாட்களுக்கு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை வருகை தர உத்தரவிட்டிருந்தது.

TN Job “FB  Group” Join Now

பெற்றோர்கள் கோரிக்கை:

ஆனால் தொடக்கப்பள்ளி வகுப்புக்ளுக்கு நடப்பு கல்வி ஆண்டில் ஒரு நாள் கூட வகுப்புகள் எடுப்பதற்கு அரசு முயற்சிகளை எடுக்கவில்லை. இதே நிலை தொடர்ந்தால் தொடக்கப்பள்ளி மாணவர்கள் தமிழ் எழுத்துக்களை மறந்து விடும் சூழல் வந்து விடும். தேர்வின்றி தேர்ச்சி என்ற அறிவிப்பும் வந்ததால் மாணவர்களுக்கு பாடங்களை கற்பதில் உள்ள ஆர்வம் குறைந்து விட்டது. தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு கற்பித்தல் தொடர்பான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பெற்றோர்கள் சார்பில் தொடக்க கல்வித்துறைக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!