
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. வர போகும் குட்டி முல்லை – சீரியல் அப்டேட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது. அதாவது கதிர் முல்லை காதலுக்கு அர்த்தமாக அவர்களுக்கு குழந்தை பிறக்க இருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் குடும்பத்தையே மையமாக வைத்து கதை இருந்தாலும், அதில் கதிர் முல்லை ஜோடிக்கு தனி ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் குழந்தை இல்லாமல் தவித்த கதிர் முல்லைக்கு விரைவில் குழந்தை பிறக்க வேண்டும் என்பது தான் ரசிகர்களின் ஒரே ஆசையாக இருக்கிறது. அது விரைவில் நடக்க இருக்கிறது. தற்போது கண்ணனால் பல பிரச்சனை வர அதை எல்லாம் தாண்டி கதிர் கண்ணனை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வருகிறார்.
பாக்கியலட்சுமி சீரியலில் இனி கோபி இல்லையா? அவரே வெளியிட்ட வீடியோ – ஷாக்கில் ரசிகர்கள்!
ஆனால் கண்ணன் பிரச்சனை இன்னும் முடியாமல் கதிரை பின் தொடர இருக்கிறது. இனி வரும் எபிசோடில் கதிர் முல்லை மருத்துவமனைக்கு செல்ல, வழியில் சில ரௌடிகள் கதிரிடம் பிரச்சனை செய்கின்றனர். அப்போது முல்லைக்கு வலி வந்துவிட, உடனே அவர் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். அங்கே அவருக்கு அழகான பெண் குழந்தை பிறக்கிறது. குடும்பத்தில் அதனால் மீண்டும் சந்தோசம் திரும்ப இருக்கிறது.