கடன் வழங்கும் ஆன்லைன் செயலிகள் – உஷாரா இருங்க RBI எச்சரிக்கை!

0
கடன் வழங்கும் ஆன்லைன் செயலிகள் - உஷாரா இருங்க RBI எச்சரிக்கை!
கடன் வழங்கும் ஆன்லைன் செயலிகள் - உஷாரா இருங்க RBI எச்சரிக்கை!
கடன் வழங்கும் ஆன்லைன் செயலிகள் – உஷாரா இருங்க RBI எச்சரிக்கை!

இந்தியாவில் கடன் வழங்கும் மொபைல் செயலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனை நம்பி பலர் பணத்தை இழந்துள்ளனர். இது குறித்து RBI தற்போது எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

மொபைல் செயலி:

இன்றைக்கு இந்தியாவில் அனைத்து வேலைகளும் டிஜிட்டல் மையமாகி விட்டது குறிப்பாக பண பரிவர்த்தனைகள். பெரும்பாலானோர் ஆன்லைன் வாயிலாகவே வங்கி சார்ந்த பணிகளை முடித்து விடுகின்றனர். இந்த நிலையில் கடன் பெறுவது கூட ஆன்லைன் வாயிலாக வீட்டில் இருந்தே பெற முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. கடன் தேவைப்படும் நபர்களை குறி வைத்து பல மொபைல் செயலிகள் உருவாகிவிட்டது.

அரசால் ஒழுங்குபடுத்தப்படாத பல நிறுவனங்கள் மக்களுக்கு எளிய முறையில் கடன்களை வழங்குகின்றன. எளிதாக கடன் கிடைக்கிறது என்பதற்காக பலர் கடனை பெற்று அதனை திரும்ப கட்ட முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். கடனை திரும்ப பெறும் போது நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் கடுமையாக நடந்து கொள்கின்றனர்.

ரேஷன் கார்டில் ‘இந்த’ வேலையை முடிக்கவில்லையா? – பெயர்கள் நீக்கப்படும் அபாயம்!

இதனால் பலர் தற்கொலைக்கும் முயற்சிக்கின்றனர். அதனால் டிஜிட்டல் முறையில் கடன் வழங்கும் செயல்களை நம்ப வேண்டாம் என மத்திய ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. இதில் பல்வேறு சிக்கல்கள் இருப்பதாகவும் அறிவுறுத்தியுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!