ரேஷன் கார்டில் ‘இந்த’ வேலையை முடிக்கவில்லையா? – பெயர்கள் நீக்கப்படும் அபாயம்!

0
ரேஷன் கார்டில் 'இந்த' வேலையை முடிக்கவில்லையா? - பெயர்கள் நீக்கப்படும் அபாயம்!
ரேஷன் கார்டில் 'இந்த' வேலையை முடிக்கவில்லையா? - பெயர்கள் நீக்கப்படும் அபாயம்!
ரேஷன் கார்டில் ‘இந்த’ வேலையை முடிக்கவில்லையா? – பெயர்கள் நீக்கப்படும் அபாயம்!

ரேஷன் கார்டில் குறிப்பிட்ட செயல் முறையை முடிக்காத பட்சத்தில் ரேஷன் கார்டில் உள்ள பெயர்கள் நீக்கப்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெயர்கள் நீக்கம்:

மத்திய அரசு நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுதாரர்களையும் கேஒய்சி செயல்முறையை முடித்துக் கொள்வதற்கு அறிவுறுத்தி உள்ளது. கேஒய்சி செயல்பாடுகளை முடிக்காத பட்சத்தில் ரேஷன் கார்டில் இருந்து குறிப்பிட்ட பெயர்கள் நீக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஜம்மு காஷ்மீர் நுகர்வோர் விவகாரங்கள் மற்றும் பொது விநியோகத் துறை பொதுமக்களுக்கான அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. அதன்படி ஜம்முவில் ரேஷன் கார்டின் கேஒய்சி செயல்முறை நடந்து வருகிறது. கேஒய்சி இல்லாமல் ரேஷன் கார்டுகள் இருக்கக் கூடாது.

தமிழகத்தில் ஊர் காவல் படை ஊழியர்களுக்கு மாதம் முழுவதும் வேலை – அரசிடம் கோரிக்கை!

இதற்காக வார்டு வாரியாக முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது வரை 250 பேர் முகாம்களில் தங்கள் கேஒய்சி பணிகளை முடித்துள்ளனர். கேஒய்சி என்பது ரேஷன் கார்டில் உள்ள குடும்ப நபர்கள் ஒவ்வொருவரின் ஆதார் அட்டையுடன் அவற்றை சரி பார்க்கும் பணியாகும். இதன் மூலம் உயிரிழந்தவர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்படும். வெளியூர்களில் பணி அல்லது கல்வி நிமித்தமாக சென்றுள்ளவர்கள் சொந்த ஊருக்கு திரும்பி வந்த பின்னர் கேஒய்சி பணிகளை முடித்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்ட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!