தமிழகத்தில் ஊர் காவல் படை ஊழியர்களுக்கு மாதம் முழுவதும் வேலை – அரசிடம் கோரிக்கை!

0
தமிழகத்தில் ஊர் காவல் படை ஊழியர்களுக்கு மாதம் முழுவதும் வேலை - அரசிடம் கோரிக்கை!
தமிழகத்தில் ஊர் காவல் படை ஊழியர்களுக்கு மாதம் முழுவதும் வேலை - அரசிடம் கோரிக்கை!
தமிழகத்தில் ஊர் காவல் படை ஊழியர்களுக்கு மாதம் முழுவதும் வேலை – அரசிடம் கோரிக்கை!

தமிழகத்தில் காவலர்களுக்கு உதவியாக ஊர் காவலர் படை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அவர்களுக்கு மாதம் முழுவதும் பணி வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

அரசிடம் கோரிக்கை

தமிழக அரசின் முக்கிய துறைகளில் ஒன்றான காவல் துறையினருக்கு உதவி செய்ய ஊர்காவல் படை செயல்படுகிறது . இந்த படையில் சுமார் 1500க்கு மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு காவல் நிலையம் மற்றும் பொது விழாக்கள் என மாதம் 25 நாட்கள் பணி ஒதுக்கப்பட்டது. அவர்களுக்கு ஒரு நாளுக்கு ரூ.150 முதல் ரூ.200 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி அவர்களுக்கு மாதம் 5 நாட்கள் மட்டுமே பணி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் 5 நாட்களில் ஒரு நாளுக்கு ரூ. 560 சம்பளம் தரப்படுகிறது.

தமிழக டாஸ்மாக் கடைகளில் வரப்போகும் சூப்பர் மாற்றம் – பொதுமக்கள் ஆதரவு!!!

இதனால் அவர்கள் வேறு வேலைக்கு போக முடியாமல் கஷ்டப்படுகின்றனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், மற்ற மாநிலங்களில், ஊர்க்காவல் படையினருக்கு மாதம் முழுதும் பணி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே பணி ஒதுக்கப்படுகிறது. அது எந்த நாள் என்ற முன்னறிவிப்பும் இருக்காது. அதிகாரிகள் சொந்த வேலைக்கு எங்களை பயன்படுத்துகின்றனர். அதனால் மாதம் முழுவதும் பணி ஒதுக்கீடு செய்ய வேண்டும், அதற்கு தகுந்தாற் போல ஊதியம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!