தமிழகத்தில் நாளை (27-04-2025) மின்தடை ஏற்படுமா..?? மின்வாரியம் வெளியிட்ட முக்கிய தகவல்..!!
தமிழகத்தில் மாதந்தோறும் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கமான நடவடிக்கையாகும். இதன் காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் மாதம் ஒரு நாள் மட்டும் குறிப்பிட்ட நேரம் மின் விநியோகம் தடை செய்யப்படும். இந்நிலையில் நாளை (27-04-2025) ஞாயிற்றுக்கிழமை என்பதால் மின்தடை ஏற்படுமா என மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. இதை தெளிவுபடுத்தும் வகையில் ஓர் முக்கிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு வங்கிகள் மூடப்படும்.. ரிசர்வ் வங்கி அறிவித்த முக்கிய தகவல்..!!
பொதுவாக ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் பொதுமக்களின் மின் தேவையை கருத்தில் கொண்டு தமிழகத்தில் மின் விநியோகம் தடை செய்யப்படுவதில்லை. இந்நிலையில் கோடைகால வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருப்பதால் மக்களின் நலன் கருதி தமிழக மின்வாரியம் ஆனது நாளை மின்தடை எதுவும் நிகழாது என்று தெரிவித்துள்ளது.


























