வியர்வையில் இருந்து கூட நிஃபா வைரஸ் பரவல் – பொதுமக்களுக்கான முக்கிய எச்சரிக்கை!
கொரோனாவை காட்டிலும் நிஃபா வைரஸ் மிக கொடிய முறையில் பரவி வரும் நிலையில் பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நிஃபா வைரஸ்:
கேரளா மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக நிஃபா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. அதிலும், குறிப்பாக கடந்த இரண்டு நாட்களாகவே நிஃபா வைரஸ் பரவலால் உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. மேலும், இந்த தொற்று கொரோனாவை விட கொடியதாக மூச்சு காற்று, வியர்வை மூலமாகவும் பரவுவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
இந்நிலையில், நிஃபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் வியர்வை, ரத்தம், உமிழ்நீர் ஆகியவற்றை தொடக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. நிஃபா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்கும்படியும், நோயாளி தொடர்புடையவர்களையும் தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு அமல்.. விரைவில் பழைய ஓய்வூதியம் – முதல்வர் உறுதி!
இது மட்டுமல்லாமல், வீட்டை விட்டு வெளியேறும் போது கட்டாயமாக பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும். வவ்வாலில் இருந்து தான் நிஃபா வைரஸ் பரவுகிறது என்பதால் பொதுமக்கள் வவ்வால்களை அச்சறுத்தி அதனை பறக்க செய்ய வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.