அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு அமல்.. விரைவில் பழைய ஓய்வூதியம் – முதல்வர் உறுதி!
சிக்கிம் மாநிலத்தின் முதல்வர் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அகவிலைப்படி உயர்வு:
மத்திய அரசு ஜனவரி 2023 – ஜூன் 2023 6 மாத தவணைக்கான அகவிலைப்படியை 4% உயர்த்தி கடந்த மார்ச் மாதம் அறிவித்தது. இதனை தொடர்ந்து மாநில அரசுகளும் அகவிலைப்படியை உயர்த்தியது. தற்போது சிக்கிம் மாநில முதல்வர் பிரேம் சிங் தமாங் அவர்கள் மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்தி 42 % ஆக அறிவித்துள்ளார்.
TNPSC குரூப் 4 தேர்வுக்கு தயாராக போறீங்களா? – உடனே இந்த வகுப்பில் இணையுங்கள்!
இந்த அகவிலைப்படி உயர்வு ஜனவரி 2023 முதல் அமலுக்கு வரும் என்றும், தசரா பண்டிகைக்கு முன்னதாக நிலுவைத்தொகை செலுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், சிக்கிம் மாநிலத்தில் விரைவில் அரசு ஊழியர்களின் கோரிக்கை ஏற்று பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதனால் அரசு ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.