UG நீட் தேர்வு முடிவுகள் 2023 – எதிர்பார்ப்பில் தேர்வர்கள்.. வந்தாச்சு நியூ அப்டேட்!

0
UG நீட் தேர்வு முடிவுகள் 2023 - எதிர்பார்ப்பில் தேர்வர்கள்.. வந்தாச்சு நியூ அப்டேட்!
UG நீட் தேர்வு முடிவுகள் 2023 - எதிர்பார்ப்பில் தேர்வர்கள்.. வந்தாச்சு நியூ அப்டேட்!
UG நீட் தேர்வு முடிவுகள் 2023 – எதிர்பார்ப்பில் தேர்வர்கள்.. வந்தாச்சு நியூ அப்டேட்!

இந்தியாவில் இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு கடந்த 7ம் தேதி அன்று நடைபெற்றது. இந்த தேர்வின் முடிவுகள் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்த்து வரும் நிலையில் முக்கிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

நீட் தேர்வு

இந்தியாவில் MBBS, BDS , பல் மருத்துவம், ஆயுர்வேதா, சித்தா, ஹோமியோபதி உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த 7ம் தேதி அன்று நடைபெற்றது. இந்த தேர்வை எழுத சுமார் 20,87,445 பேர் விண்ணப்பித்திருந்தனர். நாடு முழுவதும் 499 நகரங்களில் மே 7ம் தேதி மதியம் 2 மணி முதல் மாலை 5.20 வரை இந்த தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வின் முடிவுகள் எப்போது வெளியாகும் என்று மாணவர்கள் எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர்.

தமிழகத்தில் கொட்டித்தீர்க்கும் மழை – சென்னையில் வீசும் சூறாவளி காற்று!

தற்போது கல்லூரிகளில் 2023 – 2024 ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகாததால் மருத்துவம் படிக்கும் கனவோடு இருக்கும் மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலையில் இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு ஜூன் மாதம் முதல் வாரத்தில் வெளியாகலாம் என்று தகவல்கள் வந்துள்ளது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!