கட்டடவியல் படிப்புகளுக்கான “நாடா நுழைவு தேர்வு” – மார்ச் 5 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்!!
இளங்கலை கட்டடவியல் படிப்புகளுக்கான நாடா நுழைவு தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் இன்று முதல் (மார்ச் 5) தொடங்கப்பட உள்ளதாக இந்திய ஆர்கிடெக்ட் கவுன்சில் அறிவித்துள்ளது.
நாடா நுழைவு தேர்வு:
2021 ஆம் கல்வி ஆண்டில் பி.ஆர்க் எனப்படும் கட்டடவியல் படிப்புகளுக்கான நாடா தேர்வுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த தேர்வை இந்தியஆர்கிடெக்ட் கவுன்சில் நடத்துகிறது. இந்த தேர்வு ஆண்டுக்கு 2 முறை நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே இந்த படிப்புகளில் மாணவர் சேர்க்கை பெற முடியும்.
TN Job “FB
Group” Join Now
இந்நிலையில் 5 ஆண்டு படிப்புகளான பி.ஆர்க் படிப்புகளுக்கு சேர விருப்பமுள்ள மாணவர்கள் நாடா தேர்வு எழுத மார்ச் 5 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரையும். இரண்டாம் தேர்வு எழுத மார்ச் 5 முதல் மே 30 ஆம் தேதி வரையும் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ள மாணவர்கள் http://nata.in/ என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
2021 ஆம் ஆண்டுக்கான சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியல் – சென்னை ஐஐடி முதலிடம்!!
இந்த நாடா தேர்வுகளுக்கான முதல் தேர்வு ஏப்ரல் 10 ஆம் தேதி நடைபெறும். அந்த தேர்வுகளுக்கான முடிவுகள் 14 ஆம் தேதி வெளியிடப்படும். நாடா இரண்டாம் தேர்வுகள் ஜூன் 12 ஆம் தேதி நடைபெறும் இந்த தேர்வுக்கான முடிவுகள் 16 ஆம் தேதி வெளியிடப்படும். இதுகுறித்த கூடுதல் விவரங்களை நாடா தேர்வு இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்