வாட்ஸ் ஆப் பயனர்களுக்காக வந்தது ஒரு புதிய அம்சம்..!!மெட்டா நிறுவனம் அறிவித்த அறிவிப்பு ..!!
இன்று நாம் எந்தவித தகவல்களையும் ஒரு நபருக்கு தெரிவிக்க வேண்டும் என்றால் முதலில் நம் ஞாபகத்திற்கு வருவது வாட்ஸ் ஆப் தான். அத்தகைய வாட்ஸ் ஆப் நிறுவனம் அதன் பயனர்களை மகிழ்விக்கும் விதமாக பல்வேறு வகையான அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் போலவே வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ்க்கு லைக் செய்யும் அம்சத்தை கொண்டு வந்த நிலையில், தற்போது வாட்ஸ் ஆப்-ல் வைக்கும் ஸ்டேட்டஸை ரீஷேர் செய்யும் புதிய அம்சத்தை கொண்டுவர உள்ளதாக மெட்டா நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், இத்தகைய அம்சம் கூடிய விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று அறிவித்துள்ளது.
திடீரென முடங்கிய இன்ஸ்டாகிராம் செயலி.. அதிர்ச்சியில் பயனாளர்கள்.. முழு விவரம் இதோ!!


























