தமிழகத்தில் இன்று (அக்.8) 10 மாவட்டங்களில் மழை பெய்யும்.. வானிலை மையம் அலர்ட்!!
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (அக். 8) கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், திருப்பூர், தேனி , திண்டுக்கல் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் திருப்பத்தூர் என 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
47000 பேருக்கு வேலை.. 14 புதிய முதலீடுகளுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல்.. வெளியான முக்கிய தகவல்!!
சென்னையை பொறுத்த வரையில், வானம் ஓரளவுக்கு மேகமுட்டத்துடனே இருக்குமே தவிர அதிக பட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும். அதேபோல் வரும் இன்று (அக்டோபர் 8) முதல் அக்டோபர் 12 ஆம் தேதி வரை மன்னர் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதியில் மற்றும் அதனை ஒட்டிய குமரி கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது.


























