அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – மேரா ரேஷன் செயலியின் முக்கிய அம்சங்கள்!

0
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் - மேரா ரேஷன் செயலியின் முக்கிய அம்சங்கள்!
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் - மேரா ரேஷன் செயலியின் முக்கிய அம்சங்கள்!
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – மேரா ரேஷன் செயலியின் முக்கிய அம்சங்கள்!

இந்தியாவில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தின் சேவைகளை எளிதாக அணுகுவதற்கு மேரா ரேஷன் என்ற செயலியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த செயலியில் இருக்கும் சில முக்கிய அம்சங்களை இப்பதிவில் பார்க்கலாம்.

மேரா ரேஷன்

கடந்த ஆண்டில் மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ (ONORC) திட்டம் நாடு முழுவதும் உள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பயனளிக்கிறது. இந்த திட்டத்தை அரசாங்கம் தற்போது ஒரு செயலி மூலம் எளிமைப்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ (ONORC) திட்டத்தின் ஒரு பகுதியாக அறிமுகம் செய்யப்பட்ட ‘மேரா ரேஷன்’ செயலியின் கீழ், பணி நிமித்தமாக புதிய இடத்திற்கு இடம்பெயரும் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை தக்கவைத்துக் கொள்ள உதவுகிறது.

ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு ஹாப்பி நியூஸ் – போட்டோவை மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

இப்போது அரசின் இந்த முன்முயற்சியானது மக்கள், ரேஷன் சேவைகளை தடையில்லாமல் பெற்றுக்கொள்ளவும், ரேஷன் கார்டுதாரர்கள் தங்கள் வசதிக்கேற்ப ஒரே ரேஷன் கார்டை பயன்படுத்தவும் உதவி செய்கிறது. இந்தச் சேவையை பெறுவதற்கான ஆப்ஸ் கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள ஆண்ட்ராய்டு போன்களில் கிடைக்கிறது. வழக்கமாக ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் பிடிஎஸ் எனப்படும் பொது விநியோக முறை மூலம் உணவு தானியங்களை பெறுவது வழக்கம். இப்போது மேரா ரேஷன் செயலி மூலம் இந்த PDS தொடர்பான பிரச்சனை தீர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய:
  • Google Play Storeக்கு செல்லவும்
  • தேடல் பொத்தானைக் கிளிக் செய்து, மேரா ரேஷன் ஆப் என தட்டச்சு செய்யவும்
  • மத்திய Aepds குழு பதிவேற்றிய செயலியை பதிவிறக்கம் செய்யவும்.
சேவைகள்:
  • முதலில் பயனாளர்கள் ‘மேரா ரேஷன்’ செயலியை பதிவிறக்கம் செய்ததும், ரேஷன் கார்டு எண்ணை வழங்கி தங்களை பதிவு செய்து கொள்ளலாம்.
  • பயனர்கள் இருப்பிடத்தை தொலைபேசியில் இருந்து இயக்குவதன் மூலம் அவர்களுக்கு அருகில் அமைந்துள்ள ரேஷன் கடைகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.
  • இந்த செயலியின் மூலம் ஒரு நாடு ஒரே ரேஷன் கார்டு வசதி உள்ள மாநிலங்களையும் சரிபார்க்கலாம்
  • தொடர்ந்து ரேஷன் கார்டு எண்ணை உள்ளிடுவதன் மூலம், பயனாளிகள் பரிவர்த்தனை விவரங்களையும் பெறலாம்

  • ஆதார் எண் அல்லது ரேஷன் கார்டு எண்ணை பயன்படுத்தி கார்டுதாரரின் தகுதியை சரிபார்க்கலாம்.
  • ஆதார் எண் அல்லது ரேஷன் கார்டு எண்ணை வழங்கும் அதே முறையில் ஆதார் இணைப்பு முறையும் இதில் சாத்தியமாகும்.
  • பயனாளிகள் தங்களது மொபைல் எண் மற்றும் கார்டு எண்ணைப் பகிர்வதன் மூலம் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் சேவைகளை மதிப்பிடலாம்.
  • அதற்கு கருத்து தெரிவிக்கலாம்
  • நியாயமான விலை என அறியப்படும் உரிமம் பெற்ற கடைக்கு Fps பின்னூட்டம் மூலம் கருத்துக்களுடன் பின்னூட்டம் அளிக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!