ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு ஹாப்பி நியூஸ் – போட்டோவை மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

0
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு ஹாப்பி நியூஸ் - போட்டோவை மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு ஹாப்பி நியூஸ் - போட்டோவை மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு ஹாப்பி நியூஸ் – போட்டோவை மாற்றுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

இந்தியாவில் உள்ள மக்கள் அனைவருக்கும் ஆதார் கார்டில் தங்கள் புகைப்படத்தை மாற்ற அருமையான வழியான ஒரு வழியை இந்த தொகுப்பில் விரிவாக பார்ப்போம். எனவே ஆதார் கார்டில் உள்ள போட்டோ பிடிக்காதவர்கள் உடனே இதை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

ஆதார் கார்டு:

இந்தியாவில் உள்ள அனைத்து பொதுமக்களுக்கும் ஆதார் கார்டு என்பது தற்போது மிகவும் முக்கிய ஆவணமாக மாற்றப்பட்டு விட்டது. மேலும் ஒரு புதிய பேங்க் அக்கவுண்ட் ஓபன் செய்ய, புதிய சிம் கார்டை வாங்குதவற்கும் அல்லது கோவிட்-19 தடுப்பூசி மற்றும் பரிசோதனைகளை செய்ய என நாட்டு மக்கள் தங்கள் ஆதார் அட்டைகளை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் ரேஷன் கார்டில் பெயர் சேர்ப்பதற்கு, புதிதாக பிறந்த குழந்தையின் பெயரை சேர்க்கவும் ஆதார் கார்டு வைத்து மட்டுமே செய்ய முடியும் என்ற நிலைக்கு வந்து விட்டனர்.

அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – சூப்பர் அறிவிப்பு வெளியீடு!

நம்மில் பலருக்கு ஆதார் அட்டையில் இருக்கும் நமது புகைப்படம் பிடிக்காமல் இருக்கலாம். ஏனென்றால் அன்றைய கூட்டத்தில், கசங்கி வியர்வை வழிய புகைப்படம் எடுத்திருப்போம். அதுவும் அப்போதைய வெப்கேமில் புகைப்படம் தெளிவும் அந்த அளவிற்கு இருக்காது. மேலும் சிலர் ஆதார் கார்டு எடுத்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகலாம். ஆகவே உங்களது அப்போதைய தோற்றத்திற்கும், தற்போதைய தோற்றத்திற்கும் சில மாறுபாடுகள் இருக்கலாம். எனவே உங்கள் ஆதார் அட்டையில் உங்களின் சிறந்த புகைப்படத்தை புதுப்பிக்க விரும்பினால், நீங்கள் இப்போது எளிதாக மாற்றிக் கொள்ளலாம்.

ஆதார் அட்டை புகைப்படத்தை மாற்றுவது குறித்த தொகுப்பு, முதலில் UIDAI இன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://uidai.gov.in/ என்ற இணையதள பக்கத்திற்குச் செல்ல வேண்டும். ஆதார் பதிவு படிவத்தைப் பதிவிறக்கவும். தேவையான அனைத்து விவரங்களையும் படிவத்தில் சமர்ப்பிக்கவும்.பின்னர் ஆதார் பதிவு மையத்திற்கு சென்று படிவத்தை சமர்ப்பிக்கவும். தங்கள் புதிய படத்தை இங்கே எடுத்து, தங்களின் ஆதார் கார்டில் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இதற்கு கட்டணமாக ஜிஎஸ்டியுடன் சேர்த்து ரூ.100 செலுத்த வேண்டும்.இதற்குப் பிறகு, நீங்கள் ஒப்புகை சீட்டு மற்றும் புதுப்பிப்பு கோரிக்கை எண் (URN) பெறுவீர்கள். இந்த URN மூலம் உங்கள் ஆதார் அட்டையின் புதுப்பிப்பை நீங்கள் கண்காணிக்கலாம். இந்த புதுப்பிப்பு 90 நாட்கள் வரை ஆகலாம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆதார் அட்டையில் உங்கள் புகைப்படத்தை மாற்றும் போது அதற்கான புகைப்படம் எடுக்க ஆதார் பதிவு மையத்திற்கு செல்ல வேண்டும். தங்கள் ஆதார் அட்டையில் சிறந்த புகைப்படத்தை பெற விரும்பினால், தங்கள் நன்கு தயாராக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!