இனி இவர்களுக்கும் 6 மாத காலம் விடுமுறை – அமைச்சர் ஒப்புதல்!

0
இனி இவர்களுக்கும் 6 மாத காலம் விடுமுறை - அமைச்சர் ஒப்புதல்!
இனி இவர்களுக்கும் 6 மாத காலம் விடுமுறை - அமைச்சர் ஒப்புதல்!
இனி இவர்களுக்கும் 6 மாத காலம் விடுமுறை – அமைச்சர் ஒப்புதல்!

புதுச்சேரியில் மகளிர் ஊர் காவல் படையினருக்கு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. அமைச்சரவையின் முடிவுக்கு தற்போது கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.

மகப்பேறு விடுமுறை:

தமிழக அரசு பெண் ஊழியர்களுக்கு ஒரு வருட காலம் அதாவது 12 மாதம் முழு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுமுறை வழங்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து தற்காலிகமாக பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கும் 6 மாத காலம் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என அண்மையில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது புதுச்சேரியில் மகளிர் ஊர்க்காவல் படையினருக்கும் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

தமிழகத்தில் நாளை (நவ.30) இந்த இடங்களில் கரண்ட் இருக்காது – மின் வாரியம் அறிவிப்பு!

இது குறித்து புதுச்சேரி அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டு சட்ட மசோதா கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. இந்த முடிவிற்கு தற்போது புதுச்சேரி ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். இதனையடுத்து மகளிர் ஊர்க்காவல் படையினருக்கும் ஆறு மாத காலம் மகப்பேறு விடுப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!