
புதுச்சேரியில் கட்டாய தேர்ச்சி முறை ரத்து…!! அதிர்ச்சியில் மாணவர்கள்…தனியார் பள்ளியை குறிவைத்த கல்வி அமைச்சர்”..!!
இந்தியாவில் 5 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இருக்கும் கட்டாய தேர்ச்சி முறையானது அவர்களின் கல்வித்திறனை பெரிதளவில் பாதிப்பதால், மத்திய அரசின் கீழ் இயங்கும் பள்ளிகளுக்கு கட்டாய தேர்ச்சி நடைமுறை ரத்து செய்யப்படுவதாக நேற்று(23.12.2024) மத்திய கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். மேலும், இது குறித்து அந்தந்த மாநில அரசுகள் முடிவெடுத்து கொள்ளலாம் என்றும் அறிவித்திருந்தனர்.
அந்த வகையில், மத்திய அரசு கட்டாய தேர்ச்சி முறையை ரத்து செய்ததை தொடர்ந்து, தற்போது புதுச்சேரியில் 5 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் அரசு பள்ளி மாணவர்களிடையே அந்நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக புதுச்சேரி கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். மேலும், தனியார் பள்ளிகளும் இந்த நடைமுறையை கடைபிடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

























