
பெண் குழந்தை திருமணங்களின் அவலம்..!! ” தமிழகத்தில் இந்த மாவட்டம் முதலிடம்…வெளிவரும் அதிர்ச்சி தகவல்”..!
முந்தைய காலத்தில் 18 வயது பூர்த்தியடையாத பெண் குழந்தைகளுக்கு பெற்றோரே திருமணம் செய்து வைக்கும் அவலம் அதிக அளவில் இருந்து வந்தது. காலம் கடக்க நாகரீகம் வளர வளர பெண் குழந்தை திருமணங்கள் நடப்பது கணிசமாக குறைந்து வந்தது. ஆனால், தற்போது மீண்டும் பெண் குழந்தை திருமணங்கள் அதிகரித்து வருவதாக தகவல் அறியும் உரிமை சட்டம்(RTI) அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதாவது, தமிழ்நாட்டில் கடந்த 2023 ம் ஆண்டில் மட்டுமே 1054 பெண் குழந்தை திருமணங்களும், நடப்பாண்டில் 1640 பெண் குழந்தை திருமணங்களும் அரங்கேறி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2023-24 ம் ஆண்டில் மட்டுமே 55.6% பெண் குழந்தை திருமணங்கள் நடந்துள்ளன. இதுமட்டுமின்றி, தமிழகத்தில் நடப்பாண்டில் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டத்தில் 133 மற்றும் ஈரோட்டில் 150 குழந்தை திருமணங்கள் நடந்துள்ளன. மேலும், பெண் குழந்தைகளுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்படாமல் கல்வி கற்க வேண்டும் என்று புதுமை பெண் திட்டத்தை செயல்படுத்தியும் இவ்வாறு குழந்தை திருமணங்கள் அரங்கேறி இருப்பது அதிர்ச்சியை அளிப்பதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

























