TNPSC குரூப் 2 தேர்வில் புதிய குழப்பம் – உயர்நீதிமன்றம் விளக்கம்!!
TNPSC குரூப் 2 தேர்வில் ஜெய்ஹிந்த் என எழுதியதால் விடைத்தாளை மதிப்பீடு செய்யாத நிலையில் உயர்நீதிமன்றம் புதிய உத்தரவினை வெளியிட்டுள்ளது.
குரூப் 2:
தமிழகத்தில் கடந்த 2014ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் குரூப்-2 முதன்மை தேர்வில் ஜெய்ஹிந்த் என எழுதியதால் விடைத்தாளை திருத்தம் செய்யவில்லை என தேர்வாளர் வழக்கு தொடர்ந்திருந்தார். அதாவது, தேர்வில் இயற்கை வளங்களின் முக்கியத்துவம் மற்றும் பாதுகாப்பு குறித்த கட்டுரை பகுதியின் இறுதியில் ஜெய்ஹிந்த் – இயற்கையோடு இணைந்து வாழ்வோம் என எழுதியதற்காக விடைத்தாள் செல்லாது என தேர்வாணையம் அறிவித்துவிட்டது.
அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு – DA 4% உயர்வு.. அறிவிப்பை வெளியிட்ட முதல்வர்!
இந்த வழக்கினை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றம் இயற்கை வளங்களின் முக்கியத்துவம் மற்றும் பாதுகாப்பு என்கிற தலைப்பிற்கு ஜெய்ஹிந்த் – இயற்கையோடு இணைந்து வாழ்வோம் என எழுதியது பொருத்தமானது தான் என கூறி விடைத்தாளை மதிப்பீடு செய்து தேர்வாளர் பணி நியமனத்திற்கான மதிப்பெண்ணெய் பெற்றிருந்தால் உடனடியாக பணியானை வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.