இந்தியாவில் ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறதா..? நாளை வெளியாகும் முக்கிய முடிவு..!

0
இந்தியாவில் ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறதா
இந்தியாவில் ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறதா

இந்தியாவில் ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறதா..? நாளை வெளியாகும் முக்கிய முடிவு..!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில் வரும் ஏப்ரல் 14ம் தேதி உடன் ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வருகிறது. இந்நிலையில் ஊரடங்கை மேலும் நீட்டிக்குமாறு மாநில முதல்வர்கள் பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்து வருவதால் நாளை நடைபெற உள்ள ஆலோசனையில் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது.

முதல்வர்களுடன் ஆலோசனை:

பிரதமர் மோடி அவர்கள் கடந்த 8ம் தேதி மாநில முதல்வர்களுடன் நடத்திய வீடியோ கான்பரன்சிங் ஆலோசனையில் நாட்டில் சமூக நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. அதனால், கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய நிலையில் உள்ளோம். மக்களின் உயிரையும், வாழ்வையும் காப்பாற்றுவது தான், அரசுக்கு முக்கியமான பணி என தெரிவித்த நிலையில் நாளை (ஏப்ரல் 11) மீண்டும் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.

அரசு பணியாளர் மரணமடைந்தால் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்

நாளை முடிவு:

நாளை பிரதமர் மோடி அவர்கள் தலைமையில் மாநில முதல்வர்களுடன் நடைபெற உள்ள ஆலோசனையில் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பது அல்லது முடித்துக் கொள்வது குறித்து அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. பல மாநிலங்களில் முதல்வர்கள் ஊரடங்கை நீட்டிக்க விரும்புவதால் இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு மேலும் பல நாட்களுக்கு நீட்டிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

ஏப்ரல் 14ம் தேதிக்கு பிறகு ரயிலில் பயணம் செய்ய முடியுமா..?

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!