கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் அரசு பணியாளர் மரணமடைந்தால் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் – தமிழக முதல்வர் அறிவிப்பு !!!

0

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் அரசு பணியாளர் மரணமடைந்தால் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் – தமிழக முதல்வர் அறிவிப்பு !!!

கொரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு எடுத்து வருகிறது. இரவு பகல் பாராது, தங்கள் உயிரையும் துச்சம் என நினைத்து, பொதுமக்களை காப்பாற்றும் சீரிய பணியில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல் துறையினர், வருவாய்த் துறையினர், உள்ளாட்சித் துறை பணியாளர்கள் ஆகியோரின் பணியை அனைவரும் மனதார பாராட்டு வேண்டிய ஒன்று.

அரசு பணியாளர் மரணம்:

சென்னை மைலாப்பூர் போக்குவரத்து காவல் பிரிவில், காவலராக பணிபுரிந்து வந்த அருண்காந்தி பட்டினப்பாக்கத்தில், கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையான ஊரடங்கை அமல்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போது, நெஞ்சு வலி ஏற்பட்டு, மருத்துவமனையில் உயிரிழந்தார்.

ரூ.10 லட்சம் நிவாரணம்

எனவே அருண்காந்தியின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தமிழக அரசு சார்பில் தெரிவித்துக் கொள்ளவதாகவும், அவரது குடும்பத்திற்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சம் வழங்க உத்தரவிட்டு உள்ளதாகவும் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார் . அவரது குடும்பத்தினர் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப்பணி வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சென்னையில் மளிகை கடைக்காரருக்கு கொரோனா.!

தன்னலம் கருதாமல் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நிவாரணப் பணிகளில் ஈடுபடும் அரசு பணியாளர்கள் எவரேனும் பணியில் இருக்கும்போது துரதிஷ்டவசமாக உயிரிழக்க நேரிட்டால் அவர்களின் குடும்பத்திற்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.10 லட்சம் வழங்கவும், அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப் பணி வழங்கவும் உத்தரவிட்டு உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

ஏப்ரல் 14ம் தேதிக்கு பிறகு ரயிலில் பயணம் செய்ய முடியுமா..?

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!