ஏப்ரல் 14ம் தேதிக்கு பிறகு ரயிலில் பயணம் செய்ய முடியுமா..? ரயில்வே துறையின் விளக்கம் இதோ..!

0

ஏப்ரல் 14ம் தேதிக்கு பிறகு ரயிலில் பயணம் செய்ய முடியுமா..? ரயில்வே துறையின் விளக்கம் இதோ..!

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது வரும் ஏப்ரல் 14-ம் தேதி ஊரடங்கு உத்தரவு முடிந்தபின் ரயில் சேவை தொடங்கப்படுமா என்று சிலர் கேட்ட கேள்விக்கு ரயில்வே துறை பதில் தெரிவித்துள்ளது.

மோடி அறிவிப்பு

கொரோனா வைரஸைத் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் முழுவதும் ஊரடங்கு உத்தரவு திட்டத்தை பிரதமர் மோடி கடந்த மார்ச் 25-ம் தேதி அறிவித்தார். இதனால் அனைத்து கல்வித்துறையும் தொழிற்சாலைகள், நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. மக்களும் வேலை இல்லாமல் வீட்டுக்குள்ளே இருந்து சமூக விலகலைக் கடைப்பிடித்து வருகின்றனர் நாட்டு மக்கள்

ரயில்வே துறை ஆலோசனை

கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் சரக்கு ரயிலைத் தவிர அனைத்துப் பயணிகள் ரயில்களும் நிறுத்தப்பட்டன. வரும் 14-ம் தேதி ஊரடங்கு உத்தரவு முடிவதால், அதன்பின் எவ்வாறு ரயில்கள் இயக்கப்படும், முக்கியமான வழித்தடங்களுக்கு முன்னுரிமை அளித்து இயக்கப்படலாம், ஒவ்வொரு கட்டமாக இயக்கப்படலாம் என்று ஊடங்களில் பல்வேறு செய்திகள் தொடர்ந்து வந்தன.இந்த ஊகச் செய்திகள் அனைத்துக்கும் விளக்கம் அளித்து ரயில்வே துறை அறிவிக்கை வெளியிட்டுள்ளது.அதில், “ஏப்ரல் 15-ம் தேதி முதல் ரயில்கள் இயக்குவது குறித்து ரயில்வே துறை சார்பில் எந்த விதமான முடிவும் இதுவரை எடுக்கப்படவில்லை. அவ்வாறு இயக்க ரயில்வே தயாராகி வருகிறது என்ற செய்திகள் வதந்தியே.

தமிழகத்தில் ஒரே நாளில் 96 பேருக்கு கொரோனா உறுதி

அனைத்துத் அதிகாரிகளுடனும் கூட்டுக் கலந்தாய்வு செய்து, ஆலோசித்தப் பின் பயணிகளின் நலனுக்கு ஏற்றவாறு நல்ல முடிவும், பயணிகள் ரயில் இயக்குவது குறித்து சரியான நேரத்தில் ரயில்வே துறை அறிவிக்கும். சில ஊடகங்களில் வரும் செய்திகள், சமூக ஊடங்களில் வரும் ஆதாரமில்லாத செய்திகளை மற்றும் வதந்திகள் போன்றவற்றை மக்கள் நம்ப வேண்டாம் எனத் தெரிவித்துள்ளது ரயில்வே துறை

மக்கள் சமூக விலகல்

ரயில் போக்குவரத்து ஏப்ரல் 15-ம் தேதியிலிருந்து தொடங்கினால் பயணிகள் அனைவரும் சமூக விலகலைக் கடைப்பிடித்தல், ஆரோக்கிய சேது செயலியைப் பயன்படுத்த அறிவுறுத்தல், முகக் கவசம் கட்டாயமாக அணிதல் போன்றவை ரயில்வே துறை சார்பில் வலியுறுத்தப்படும் என சில லாட்டுப்பாடுடன் இயக்க வேண்டும் என்ற செய்திகள் வெளியாகின.

ஊரடங்கு நீட்டிக்கப்படுமா, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு உள்ளிட்ட முதல்வரின் அறிவிப்புகள்..!

மேலும், பயணிகள் தீவிர தெர்மல் ஸ்கேனிங்கிற்குப் பின்பே பயணத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். முதலில் குறிப்பிட்ட வழித்தடத்தில் மட்டும் ஒவ்வொரு ரயில் போக்குவரத்தும் தொடங்கப்படும் எனச் செய்திகள் வெளியாகின.

ரயில்வே துறை மறுப்பு

ஊரடங்கு உத்தரவு முன் நோயாளிகள், மாணவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் டிக்கெட் முன்பதிவில் சலுகை தரப்படும். சில ரயில் நிலையங்களில் எப்போதும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். அதனால் பயணிகள் கூட்டத்தைக் குறைக்க சில கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படும் எனக் கூறப்பட்டது. ஆனால் அனைத்தையும் ரயில்வே மறுத்துள்ளது.

பள்ளி, கல்லூரிகளை மே 15 வரை திறக்க வேண்டாம் – மத்திய அமைச்சரவைக்குழு பரிந்துரை..!

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!