எல்ஐசி-ன் அதிக பலன் தரும் சிறந்த ஓய்வூதிய திட்டம் – முழு விவரம் இதோ!
இந்தியாவின் பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி முதுமை காலத்தில் நிதி நெருக்கடி இல்லாமல் இருக்க சிறந்த திட்டம் ஒன்றை அமல்படுத்தி இருக்கிறது.
எல்ஐசி திட்டம்
நாடு முழுவதும் மக்கள் இளமை காலத்தில் நன்றாக சம்பாதித்து விட்டு, முதுமை காலத்தில் சேமித்த பணத்தை கொண்டு சந்தோசமாக இருக்க வேண்டும் என நினைக்கின்றனர். இந்நிலையில் இந்தியாவின் பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி 40-50 வயதைத் தாண்டிய பிறகு ஓய்வூதியம் வழங்கும் சிறந்த திட்டம் ஒன்றை அமல்படுத்தி இருக்கிறது.
Follow our Instagram for more Latest Updates
இந்த திட்டத்தின் பெரிய அம்சம் என்னவென்றால் ஒரு முறை மட்டுமே பணத்தை டெபாசிட் செய்ய வேண்டும். அதன் பின் உங்களின் ஓய்வு காலம் முழுவதும் ஓய்வூதியம் வழங்கப்படும். எல்ஐசியின் இந்த திட்டத்திற்கு புதிய ஜீவன் சாந்தி யோஜனா திட்ட எண் 858 என்பது பெயர். இந்த திட்டத்தை தொடங்கும் போதே எப்போது உங்களுக்கு ஓய்வூதியம் தேவை என தேர்வு செய்ய வேண்டும்.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச சர்க்கரை வழங்க திட்டம் – மாநில அரசு அறிவிப்பு!
மேலும் குறைந்தபட்சம் ஒரு வருட கால இடைவெளிக்கு பின் ஒவ்வொரு மாதமும் ஓய்வூதியத்தை பெறலாம். இந்த திட்டம் ஒரு பிரீமியம் திட்டமாகும், அதாவது நீங்கள் ஒரு முறை மட்டுமே முதலீடு செய்ய வேண்டும். ஒத்திவைக்கப்பட்ட வருடாந்திரத் திட்டம் (முதலீட்டிற்குப் பிறகு 1 முதல் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஓய்வூதியத்தைப் பெறுவதற்கான விருப்பம்) ஓய்வூதியத் தொகையை ஆண்டுதோறும், அரையாண்டு, காலாண்டு மற்றும் மாதந்தோறும் பெறலாம். மேலும் இந்த திட்டத்தில் 6.81 முதல் 14.62 சதவீதம் வரை வட்டி கிடைக்கிறது.