விவகாரத்து வழக்கில் அதிரடி தீர்ப்பளித்த நீதிபதிகள் – டெல்லி உயர்நீதிமன்றம்!
டெல்லி உயர்நீதிமன்றத்திற்கு வந்த விவாகரத்து வழக்கு ஒன்றில் நீதிபதிகள் அதிரடி தீர்பளித்துள்ளனர். இந்த வழக்கு அன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விவாகரத்து வழக்கு:
சமீப காலமாக அதிக அளவிலான விவாகரத்துகள் திருமண வாழ்வில் நடந்து வருவருவது சகஜமாகி விட்டது. இதற்கான காரணங்களும் மிகவும் வினோதமாக இருந்து வருகிறது. இந்நிலையில், தற்போது டெல்லி உயர்நீதிமன்றத்தில் கணவன், மனைவி இடையே விவகாரத்து வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் முன்னிலையில் வந்தது.
எல்ஐசி-ன் அதிக பலன் தரும் சிறந்த ஓய்வூதிய திட்டம் – முழு விவரம் இதோ!
அப்போது, டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள், விவாகரத்து வழக்கு நிலுவையில் இருக்கும் போது, நீண்ட காலமாக மனைவியை பிரிந்து வாழும் கணவரும் வேறொரு பெண்ணுடன் வாழ்வது மனைவியை கொடுமைப்படுத்துவதாக கருதி, விவகாரத்திற்கான முகாந்திரமாக எடுத்துக் கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளனர். அப்பெண் மூலம் நீண்ட காலம் மனைவியை பிரிந்திருந்த நபர் அமைதியையும், ஆறுதலையும் பெற்றிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.