தமிழகத்தில் இன்று (செப்.16) 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு!
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும் மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மழைக்கு வாய்ப்பு:
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று (செப்.15) காலை கிழக்கு மத்திய பிரதேசம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு திசையை நோக்கி நகர்ந்தது. இந்த மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இன்று (செப்.16) செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யும்.
விவகாரத்து வழக்கில் அதிரடி தீர்ப்பளித்த நீதிபதிகள் – டெல்லி உயர்நீதிமன்றம்!
மேலும் செப்.17 ஆம் தேதி கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் செப். 18 முதல் செப் 22 வரை மழை பெய்ய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல இன்று முதல் செப் 19 ஆம் தேதி வரை வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் அதிகமான காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.