ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச சர்க்கரை வழங்க திட்டம் – மாநில அரசு அறிவிப்பு!
உத்திரபிரதேச மாநிலத்தில் குறிப்பிட்ட சில குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த மாதம் இலவச சர்க்கரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரேஷன் கடை
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச கோதுமை மற்றும் அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பொதுமக்களுக்கு கூடுதலாக இலவச சர்க்கரை வழங்குவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. ஆனால், குறிப்பிட்ட சில ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டுமே இந்த இலவச சர்க்கரை வழங்கப்படும் எனவும், இந்த மாதத்திற்கான இலவச ரேஷன் விநியோகம் துவங்கப்பட்டுள்ளதாகவும் மாநில அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசுப் பள்ளிகளில் பணிமாறுதல் பெற விண்ணப்பிக்கலாம் – செப் 30 கடைசி நாள்!
இது மட்டுமல்லாமல், அந்த்யோதயா அட்டை வைத்திருப்பவர்களுக்கும் ஒரு கிலோ சர்க்கரை ரூ.18க்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல, அந்த்யோதயா அட்டைதாரர்களுக்கு 21 கிலோ அரிசி, 14 கிலோ கோதுமை இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதே போல, சாதாரண வீட்டு அட்டைதாரர்களுக்கு யூனிட் ஒன்றுக்கு 5 கிலோ இலவசமாக வழங்கப்படும். மேலும், அந்த்யோதயா அட்டை வைத்திருப்பவர்களுக்கு இந்த மாதம் மூன்று மாத சர்க்கரை வழங்கப்பட இருப்பதாகவும், செப்.23 ஆம் தேதிக்குள் பெற்றுக்கொள்ளும்படியும் அறிவிக்கப்பட்டுள்ளது.