கரூர் மாவட்டத்தில் ரூ.55,000/- மாத ஊதியத்தில் காத்திருக்கும் அரசு வேலை – டிகிரி தேர்ச்சி போதும்!
Aspirational Block Fellow பணிக்கு என கரூர் மாவட்ட, தோகைமலை வட்டார அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.55,000/- மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளது. இந்த தமிழக அரசு சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | Thogamalai Block Office (Karur District) |
பணியின் பெயர் | Aspirational Block Fellow |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 20.11.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
தமிழக அரசு காலிப்பணியிடங்கள்:
Aspirational Block Fellow பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.
Aspirational Block Fellow கல்வி தகுதி:
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Postgraduate Degree முடித்தவராக இருந்தால் போதுமானது ஆகும்.
Aspirational Block Fellow வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 30 வயதுக்குள் உள்ளவராக இருப்பின் அவர்களது விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
Aspirational Block Fellow சம்பளம்:
Aspirational Block Fellow பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.55,000/- மாத சம்பளமாக பெறுவார்கள்.
Aspirational Block Fellow தேர்வு முறை:
இப்பணிக்கு தகுதியான நபர்கள் Shortlist, Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
RCFL Apprentice வேலைவாய்ப்பு 2023 – 408 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!
Aspirational Block Fellow விண்ணப்பிக்கும் முறை:
இந்த கரூர் மாவட்ட பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (20.11.2023) தபால் செய்ய வேண்டும்.