RCFL Apprentice வேலைவாய்ப்பு 2023 – 408 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!
Apprentice பணியிடங்களை நிரப்ப ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் அண்ட் பெர்டிலைசர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த மத்திய அரசு பணிக்கு என மொத்தம் 408 பணியிடங்கள் காலியாக உள்ளன.இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால், தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
RCFL வேலைவாய்ப்பு விவரங்கள்:
Graduate Apprentice – 157 பணியிடங்கள், Technician Apprentice – 115 பணியிடங்கள் மற்றும் Trade Apprentice – 136 பணியிடங்கள் என மொத்தம் 408 பணியிடங்கள் காலியாக உள்ளன. அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து 12ஆம் வகுப்பு தேர்ச்சி/ B.Com, BBA/Any Graduate/ பணிக்கு சம்மந்தப்பட்ட துறையில் Diploma/ B.Sc. with Physics, Chemistry and Mathematic தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது 01.04.2023 தேதியின் படி, அதிகபட்சம் 25 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும். இதற்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.7000/- முதல் ரூ.9000/- வரை உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
மத்திய அரசு துறையில் மேற்கண்ட தகுதிகளை உடைய ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் இப்பணிக்கு வரும் 07.11.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்பதால், தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.