பிறந்தநாளில் கோஹ்லி சதம்.. இந்தியாவிற்கு 8வது வெற்றி!
நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் இந்தியா தென்னாப்பிரிக்கா அணியை 243 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா 8வது வெற்றியை பதிவு செய்துள்ளது.
இந்தியா வெற்றி:
நேற்று உலகக்கோப்பை 37-வது லீக் போட்டி கொல்கத்தாவில் நடைபெற்ற நிலையில் இந்தியா மற்றும் சவுத் ஆப்பிரிக்கா அணியினர் மோதிக்கொண்டனர். இதில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணியினர் பேட்டிங்கை தேர்வு செய்தனர். இதனால், முதலில் களம் இறங்கிய இந்திய அணியினர் 50 ஓவரின் முடிவில் 5 விக்கெட் இழப்பில் 326 ரன்களை பெற்றனர். விராட் கோலி 121 பந்துகளில் 101 ரன்களுடன் சதம் அடித்து அசத்தினார். இதனால், தென்னாப்பிரிக்கா அணியினருக்கு வெற்றி இலக்காக 327 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது.
Follow our Twitter Page for More Latest News Updates
இதன் பின்னர், களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணியினர் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து 27.1 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்களையும் இழந்து 83 ரன்களில் சுருண்டனர். இதனால் 243 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா எட்டாவது வெற்றியை கைப்பற்றியுள்ளது. இந்தியா இதுவரை நடந்த எட்டு போட்டிகளிலும் வென்று 16 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்துள்ளது. ஆனால், தென்னாபிரிக்கா அணி தற்போது இரண்டாவது தோல்வியை பதிவு செய்து 12 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.