இது தான் நகை வாங்க சரியான நேரம்… ஒரேடியாக சரிந்த ஆபரண தங்கத்தின் விலை!!

0
இது தான் நகை வாங்க சரியான நேரம்... ஒரேடியாக சரிந்த ஆபரண தங்கத்தின் விலை!!
இது தான் நகை வாங்க சரியான நேரம்... ஒரேடியாக சரிந்த ஆபரண தங்கத்தின் விலை!!
இது தான் நகை வாங்க சரியான நேரம்… ஒரேடியாக சரிந்த ஆபரண தங்கத்தின் விலை!!

இந்தியாவை பொறுத்தவரை தங்கத்தில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகம். ஒவ்வொரு நாளும் ஏற்ற, இறக்கத்துடன் நிர்ணயிக்கப்படும் விலையை பொறுத்து மக்கள் தங்கத்தில் முதலீடு செய்கின்றனர்.

தங்கம் விலை நிலவரம்:

தமிழ்நாட்டில் உள்ள பெண்களுக்கு தங்கத்தின் மீதான மோகம் அதிகம். தங்கம் என்றைக்குமே மக்கள் மத்தியில் ஒரு சேமிப்பாக பார்க்கப்படுகிறது. மேலும் தங்கத்தில் முதலீடு செய்வதால் எந்த சட்ட சிக்கல்களும் கிடையாது. இதனால் பல்வேறு தரப்பினரும் அதை வாங்க தொடர்ச்சியாக விலையை கண்காணிக்கிறார்கள். தற்போது தங்கம் விலை வீழ்ச்சியை நோக்கி சென்று வருகிறது. இதனால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 432 குறைந்தது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 432 குறைந்து 37 ஆயிரத்து, 8 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூபாய் 54 குறைந்து 4,626 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி 50 காசுக்கள் அதிகரித்து, ரூபாய் 61.60க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

பிரதமர் மோடியின் 72 வது பிறந்தநாள்: அடேங்கப்பா.. இதை மட்டும் நீங்க செஞ்சீங்கன்னா 8.5 லட்சம் பரிசு!!

Exams Daily Mobile App Download

தங்கம் விலை தொடர்ந்து 5வது நாளாக சரிந்துள்ளது. கடந்த 4 நாட்களில் மட்டும் சவரனுக்கு 952 ரூபாய் குறைந்துள்ளது. இதே நிலை நீடித்தால் சவரன் ரூ.36ஆயிரத்துக்கும் கீழ் செல்லும் எனத் தெரிகிறது. அமெரிக்காவில் பணவீக்கக்தைக் கட்டுப்படுத்த அந்நாட்டு பெடரல் வங்கி வட்டி வீதத்தை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு வட்டிவீதம் உயர்த்தப்பட்டால், டாலர் மதிப்பு அதிகரிக்கும், இது உலகின் பல்வேறு நாடுகளின் கரன்சிகளுக்கும் நெருக்கடியை உருவாக்கும். அதன்பின் தங்கத்தின் மீதான முதலீடு குறையும். அப்போது, தங்கத்துக்கான தேவை குறைந்து விலை வரும் நாட்களில் மேலும் விலை குறைய வாய்ப்புள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!